மாணவிகளே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க., வடசென்னை போலீஸ் இணை கமி‌ஷனர் ரம்யா பாரதி விழிப்புணர்வு.! - Seithipunal
Seithipunal


பாலியல் வன்கொடுமை குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பற்றி தெரிவித்து வருகிறார்கள்.

இதன் அடிப்படையில், சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சரண்யா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மேலும், வடசென்னை போலீஸ் இணை கமி‌ஷனர் ரம்யா பாரதி பங்கேற்று மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த விழிப்புணர்வில் அவர் மாணவிகளிடம் தெரிவித்ததாவது,

"பள்ளி பருவத்தில் இருந்தே மாணவிகள் சமூக விழிப்புணர்வு பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தங்களுக்கு நேரிடும் போன்ற பிரச்சினைகள் குறித்து மாணவிகள் உடனடியாக பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் தைரியமாக தெரிவிக்க வேண்டும். 

அடுத்தபடியாக, காவல் துறையிலும் உரிய புகார் அளிக்க வேண்டும். மேலும், 14417 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு மாணவிகள் எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு நேரிடும் பாலியல் போன்ற பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்கலாம்". என்று ரம்யா பாரதி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school girl safety call mobile number


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->