இன்ஸ்டா ஸ்கூல் புல்லிங்கோ செய்த வேலை., வைரல் ஆன வீடியோ., நேரடியாக வீட்டுக்கே சென்ற போலீஸ்.!
school pullinkos in insta
காவல் நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது, அதனை சினிமா வசனங்களுடன் வீடியோவாக வெளியிட்ட பள்ளி மாணவர்களை, வீட்டுக்கே சென்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திலிருந்து இரண்டு பள்ளி மாணவர்கள் வெளியே வந்துள்ளனர். அப்போது அதனை மற்றொரு மாணவன் வீடியோ எடுக்க, அந்த வீடியோவை வைத்து பின்னணியில் சினிமா வசனத்துடன் எடிட் செய்து, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
"நீங்க இங்க எப்படியோ... எங்க ஊர்ல நாங்க... உனக்கு தெரியலனா ரெண்டு பேர் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ" என்ற சினிமா திரைப்பட வசனத்துடன் அந்த மாணவர்கள் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வரும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார், உடனடியாக விசாரணை மேற்கொண்டதில், அந்த இரண்டு மாணவர்களும் கோட்டூர் ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் ராமதாஸ் மற்றும் உதவி ஆய்வாளர் திருமலைசாமி ஆகிய இருவரும், அந்த பள்ளி மாணவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று எச்சரிக்கை விடுத்தனர். படிக்கின்ற வயதில் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அந்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும், "இனி இதுபோன்ற தவறான செயல்களில் நாங்கள் ஈடுபட மாட்டோம், சமுதாயத்தில் நல்ல பெயரை வாங்குவோம், அதுபோலவே நாங்கள் நடந்து காட்டுவோம். முன்பு நாங்கள் வெளியிட்ட வீடியோவுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று மாணவர்களை பேசவைத்த வீடியோ ஒன்றையும், அதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலீசார் வெளியிட வைத்தனர்.
பள்ளி மாணவர்களின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. தவறை உணர்ந்த அந்த பள்ளி மாணவர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
school pullinkos in insta