பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 ஆம் வகுப்பு மாணவன் பலி - தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.!
school student died for electric shock attack in putukottai
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அருகே பத்தரசன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கைலாசம் மகன் சக்தி சோமையா. இவர் காரைக்குடியை அடுத்த பொய்யாவயல் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சக்தி சோமையா நேற்று முன்தினம் பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்சிக்காக சுவிட்சை தொட்ட போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசனை, பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
இதற்கிடையே உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். பள்ளியில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிகந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student died for electric shock attack in putukottai