தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் பள்ளி முழு ஆண்டு தேர்வு முடிந்து, கோடை விடுமுறை முடிந்த பின்னர், ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. 

நாடு முழுவதும் மக்களவை பொது தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவுகள் வரும் ஜூன் மூன்றாம் தேதி எண்ணப்பட  உள்ளது. இந்த வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், மழை மற்றும் கடுமையான வெயில் காரணமாக ஜூன் 10ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என்றும் கணிக்கப்பட்டது. 

இதற்கிடையே தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பள்ளி கல்வித்துறையின் அதிகாரிகள் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2024 -25 கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசு மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள பாடநூல்கள், சீருடைகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School TamilNadu Reopen 2024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->