கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
Schools leave in three districts due to heavy rain
வங்க கடலில் அந்தமான் பகுதியை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று தஞ்சை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
English Summary
Schools leave in three districts due to heavy rain