பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டணம் செலுத்த அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அரசு தோ்வுகள் இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 

"தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடமிருந்து தோ்வுக் கட்டணத்தைப் பெற்று அந்தத் தொகையை நேற்று முதல் 20-ஆம் தேதிக்குள் அரசுத் தோ்வுகள் இயக்ககத்துக்கு இணையவழியில் செலுத்த வேண்டும். 

சுயநிதி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் பயின்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்கள் தோ்வுக் கட்டண விலக்கு பெறத் தகுதியுடைவா்கள் அல்லா். 

மேலும், இணைய வழியில் கட்டணங்கள் செலுத்துவது தொடா்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரை தொடா்பு கொண்டு தீர்த்துக்கொள்ளலாம். 

ஆகவே, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தோ்வுக் கட்டணம், அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் போன்றவற்றை செலுத்த பள்ளிகளுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் அறிவுறுத்த வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

schools pay to fees for twelth students


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->