தகுதியில்லா கான்ட்ராக்டர்களை கண்டறிய வேண்டும்- அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு..! - Seithipunal
Seithipunal


 நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில், இன்று வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தபட்டது.இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி கமிஷனர் ஆனந்த மோகன் மற்றும் நெடுஞ்சாலை துறை, வீட்டு வசதி வாரியம் ,குடிநீர் வடிகால் வாரியத் துறை அதிகாரிகள் உள்ளிட பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் உட்பட பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் கூறியதாவது:- 

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே அஞ்சு கிராமம், புளியடி உள்ளிட்ட பகுதியில் தற்போது வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளது. அதில், அஞ்சுகிராமத்தில் 480 வீடுகள் உள்ளதில் 50 வீடுகள் தற்போது காலியாக உள்ளது. அதில் உடனடியாக பயனாளிகளை அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதேபோன்று, புளியடி பகுதியில் 30 வீடுகள் காலியாக உள்ளதில் அந்த வீடுகளையும் பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிதாக புதுகுளம் பகுதியில் 384 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு முடியும் நிலையில் உள்ளது. 

அதை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வருகிற ஐந்து ஆண்டுகளில் மாவட்டத்தில் ஐந்து ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியா குமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக சீரமைப்பு பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அந்த சாலை பிரச்சினைகள் தொடர்பாக சில புகார்கள் வந்துள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியில்லாத காண்ட்ராக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும். என்று அவர் பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

search in unfit contracters-minister mano thangaraj speach


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->