இரண்டாவது முறையாக காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு வந்த அமெரிக்க கப்பல்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில், 'எல் அண்டு டி' கப்பல் கட்டும் தளம் உள்ளது. இந்த தளத்தில் இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான ரோந்து கப்பல்கள் கட்டும் மையமும், கப்பல் பழுது பார்க்கும் மையமும் உள்ளது. 

இந்த நிலையில், இந்த துறைமுகத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க நாட்டின் கடற்படையைச் சேர்ந்த 'சார்லஸ் ட்ரூ' என்ற ராணுவ தளவாட கப்பல் பழுது மற்றும் பராமரிப்பிற்காக, முதன்முறையாக இந்தியாவிற்கு வந்தது. 

அந்த கப்பலுக்கு காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பழுது நீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கப்பல் சுமார் பத்து நாட்களுக்கு பின்னர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. 

அந்த வகையில், காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு நேற்று மாலை அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான "மேத்யூபெர்ரி" என்ற போர்க் கப்பல் பழுது பார்ப்பதற்காக வந்தது. தற்போது, அந்தக் கப்பலில் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த பணி முடிந்ததும் வருகிற 29-ந் தேதி அந்த போர்க்கப்பல் புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீன ஆதிக்கம் இருந்து வரும் நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு இரண்டாவது முறையாக அமெரிக்க போர்க்கப்பல் பழுது நீக்க வந்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

second time amaerica ship come to kattupalli port in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->