பரந்தூர் போராட்டம் | மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் கடும் கண்டனம்!
seeman condemn to Central and state govt for paranthur issue
பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைக் கைவிடக்கோரி காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4550 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 13க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3250 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனை கண்டித்து 300 நாட்களுக்கும் மேலாக அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, இத்திட்டத்தை நிறைவேற்ற முனையும் பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசையும், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று மாலை காஞ்சிபுரத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
போராடும் அம்மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி துணைநின்று போராடும் என்று, சீமான் தெரிவித்தார்.
English Summary
seeman condemn to Central and state govt for paranthur issue