பாஜகவுக்கு மட்டும் ஏன்? நான் வழக்கு தொடர்வேன்..! - சீமான் ஆவேசம்!
Seeman says case against lotus symbol bjp
சென்னை, வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர்,
சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் நேரத்தில் வெள்ள பாதிப்பு நிவாரண பணியில் நான் ஈடுபட்டிருந்தேன். நான் முதலில் மயில் சின்னத்தை கேட்டதற்கு தேசிய பறவை என கொடுக்க மறுத்தனர்.
ஆனால் தேசிய மலர் தாமரை பா.ஜ.கவிற்கு கொடுக்கப்பட்டது ஏன். இதனால் பா.ஜ.கவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு எதிராக நான் வழக்கு தொடர்வேன்.
அங்கீகாரம் பெறுவதற்குள் என்னை தூக்கி எறிந்து விட்டார்கள். கரும்பு விவசாயி சின்னம் கொடுக்காமல் என்னை முடக்க நினைக்கிறார்கள்.
ஒரு இடத்தில் கூட 100 வாக்குகளுக்கு மேல் பெறாத கர்நாடக கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கொடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman says case against lotus symbol bjp