தீண்டாமை பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; சமுகநீதி பேசுபவர்களிடம் கேளுங்கள் - சீமான் ஆவேசம்!
Seeman says do not ask me about untouchability
அமெரிக்காவில் இருந்த தம்பி வீடியோ அனுப்பினார்! மாவட்ட செயளாலர் தம்பியை நேரில் பார்க்கச் சொன்னேன்!
பாஞ்சாகுளம் கிராமத்தில் ஒரு சமுதாய பள்ளி மாணவர்களுக்கு மற்றொரு சமுதாய பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வழங்க கூடாது என சமூக வளைதளங்களில் வீடியோ பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சீமான் "ஓரிடத்தில் நடந்த விவகாரம் மட்டுமே வெளியில் வந்துள்ளது. நாடெங்கும் இந்தப் பிரச்சனை உள்ளது. இதைப் பற்றி என்னிடம் கேட்கக் கூடாது. பெரியார் மண், சமுக நீதி என்று பேசுவர்களிடம் கேளுங்கள்.
அந்தக் காணொளியை என் தம்பி அர்ஜூன் அமெரிக்காவில் இருந்து அனுப்பியதும் நானும் பார்த்தேன். உடனே மாவட்ட செயலாளர் தம்பியை அனுப்பி பார்க்க சொன்னேன். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் தம்பி சொன்னார்.
பல தலைமுறைகளாக பரவியுள்ள விஷ நஞ்சு பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆவேசமாக பதிலளித்தார்.
English Summary
Seeman says do not ask me about untouchability