தி.மு.க.விற்கு நான் ஆதரவு அளிக்கிறேன்! ஆனால் -  சீமான் அளித்த பகீர் பேட்டி! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்திருப்பதாவது, ''திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிடுகிறார். 

நேர்மையானவர் என்றால் அனைத்தையும் பற்றி பேச வேண்டும். எடப்பாடி பழனிசாமி இடம் கொடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்தை நான் வரவேற்கிறேன். 

இரண்டு மாதத்தில் கொடநாடு கொலை வழக்கில் விசாரணை செய்து நீதியை கொண்டு வருவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

ஆனால் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ளது.

இந்தியா கூட்டணி தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு வேண்டும் என வாதாடி நளினி சிதம்பரம் வென்றார். 

கூட்டணியில் அந்த கட்சியை ஏன் வைத்துள்ளீர்கள். தி.மு.க தான் தொடர்ந்து 18 ஆண்டுகள் இந்திய அமைச்சரவையில் இருந்தது. 

மாநில கட்சியாக பா.ஜ.கவும் காங்கிரசும் கர்நாடகா என வரும்போது மாறிவிடுகிறார்கள். உரிய நதிநீரை தமிழகத்திற்கு பங்கீடு செய்யாவிட்டால் காங்கிரசுக்கு பாராளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு இல்லை என்று ஸ்டாலின் தெரிவிப்பாரா? தரவில்லை என்றால் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டார். 

காங்கிரசை கூட்டணியில் இருந்து விலகினால் நான் தி.மு.கவிற்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளேன். சிறை கைதிகளால் உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்யுங்கள். 

உங்களுக்கு ஆதரவு அளிக்கிறேன். நான் 40 தொகுதிகளிலும் இருந்து விலகிக் கொள்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது. 

அதே போல் அ.தி.மு.க. அமைச்சர்கள் 6 பேர் மீது சிபிஐ ஊழல் வழக்கு உள்ளது. ஆனால் ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் பா.ஜ.கவுடன் கூட்டணியில் உள்ளார்கள்'' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman says ready to support DMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->