அரசு இதை மட்டும்தான் சிந்திக்கிறது... கல்வி குறித்து? - சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு.!
Seeman says TN Govt refusing think about education
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியை வேட்பாளர் டாக்டர் அபிநயா போட்டியிடுகின்றார்.
இவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரசாரத்தில் சீமான் பேசியிருப்பதாவது,
மாநில பட்டியலில் இருந்து கல்வியை மத்திய அரசு பொது பட்டியலுக்கு எடுத்துச் சென்றபோது, கல்வி மாநில உரிமையை பறிகொடுத்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க தான். இதை மறந்து விடுவது பொது மக்களின் இயல்பு. நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. இதைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டுள்ளோம்.
கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கை விடுகின்றனர். அதனை எடுத்துக் கொண்டு போகும் போது என்ன செய்தீர்கள். தடுக்க முடியவில்லை. கல்வி பலரை உருவாக்கியுள்ளது. ஆனால் நல்ல ஒரு அரசியல்வாதியை உருவாக்க முடியவில்லை.
மாநிலக் கட்சி ஒன்றிய அரசுடன் 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே கட்சி தி.மு.க. அன்று எல்லாம் தி.மு.கவினர் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்காக என்ன செய்தார்கள்.
தமிழகத்தில் சாராயத்தின் விலை மட்டும்தான் குறைந்துள்ளது. இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பற்றி சிந்திக்காத அரசு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் மதுவை ஐம்பதாயிரம் கோடிக்கு எப்படி விற்பனை செய்ய வேண்டும் என சிந்தித்து கொண்டுள்ளது. நாடு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Seeman says TN Govt refusing think about education