தமிழக அரசுக்கு ஒரு குட்டு! நடிகர் விஜய்க்கு ஒரு வாழ்த்து - ஒரே டிவிட்டில் தெறிக்கவிட்ட சீமான்! - Seithipunal
Seithipunal


கடந்தாண்டு 10, 12ம் வகுப்பு பொது தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைரஸ் வைர நெக்லஸ் பரிசளித்த நடிகர் விஜய், 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தமிழகம் முழுவதும் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு தனது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் உடன் ஊக்க தொகையும் அளித்தார். இந்த விழா தமிழகம் முழுவதுமே நல்ல வரவேற்பையும், நடிகர் விஜய்க்கு நல்ல மரியாதையையும் கொடுத்தது.

இதேபோல், இந்த வருடமும் சென்னையில் பிரமாண்டமாக இன்று கல்வி விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் உடன் ஊக்க தொகை, பரிசு பொருட்களையும் நடிகர் விஜய் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த விழாவிற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், "கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை. 

ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது" என்று தமிழக அரசுக்கு மறைமுகமாக கண்டனமும் தெரிவித்துள்ளார் சீமான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman Wish to TVK and Vijay


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->