கோடைக் கொண்டாட்டா விழாவில் பங்கேற்க விண்னப்பிக்கலாம்! சுய உதவி குழுக்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு.! - Seithipunal
Seithipunal


கோடைக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு நடைபெற உள்ள மாநில அளவிலான சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள குழுக்கள் முன்பதிவு செய்ய சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னையில் 2022-23ஆம் ஆண்டு கோடைக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு மாநில அளவிலான சுயஉதவிக் குழு உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

சுயஉதவிக் குழுக்களுக்காக நடைபெறும் இக்கண்காட்சியில் பங்குபெற விருப்பமுள்ள சுயஉதவிக் குழுக்கள் தங்கள் குழு தயார் செய்யும் பொருட்கள் தொடர்பான விவரங்களை திட்ட இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்/தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், எண்.100, அண்ணா சாலை, கிண்டி, சென்னை-600032 (மாசு கட்டுப்பாட்டு வாரியம் அருகில்) என்ற முகவரியில் முன்பதிவு செய்திட வேண்டும்.

மேலும் 044-2235 0636 என்ற தொலைபேசி எண் மற்றும் 9444094249 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Self help group Kodak vizha


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->