தமிழகத்தை புரட்டிய புயல் - நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலால் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று காங்கிரஸ்  மணிலா தலைவர் செல்வா பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-  "பெஞ்சல் புயலால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததால் ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது.

புயல் அறிவிப்பு வெளியான உடனேயே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்ததால் உயிர்ப்பலி போன்ற பெரிய அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இப்பெரும் புயல் மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இடைக்கால நிவாரண நிதியாக ரூபாய் 2,000 கோடியை ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

கடந்த காலங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக மத்திய அரசிடம் நிதி கேட்ட போது தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. அதேபோல, இம்முறையும் பிரதமர் மோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட தொகையை ஒதுக்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளக் கூடாது. 

இத்தகைய இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க நிவாரண நிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அணுகுமுறையை பிரதமர் மோடி கையாள வேண்டும். ஆகவே, தமிழக முதலமைச்சர் கேட்ட இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

selvaperunthagai insists pm modi releif funds imediately


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->