தமிழகத்தில் பிரசாரத்தால் மாற்றம் ஏற்படாது: செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி.!
Selvaperunthagai speech viral
தமிழகத்தில் பிரதமரின் பிரசாரத்தால் மாற்றம் நிகழாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெறவுள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் செல்வப் பெருந்தகை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று சென்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதி வழங்காத பிரதமர், தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
வட மாநில மக்களைப் போன்று தமிழர்களை ஏமாற்ற முடியாது. வருகின்ற தேர்தலில் மக்கள் பா.ஜ.கவுக்கு நல்ல தீர்ப்பை வழங்குவர். பா.ஜ.கவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவித்ததில் இருந்து தோல்வி பயம் தெரிகிறது.
தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளதால் 400 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.
இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, இந்தியாவின் பண மதிப்பை அமெரிக்காவின் பண மதிப்பிற்கு நிகராக்குவேன் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் ஊழலை பற்றி பேச பா.ஜ.கவிற்கு தகுதி கிடையாது என தெரிவித்துள்ளார்.
English Summary
Selvaperunthagai speech viral