திடீரென உயர்ந்த செங்கல் விலை - தமிழகத்தில் தத்தளிக்கும் கட்டுமான பணியாளர்கள்.! - Seithipunal
Seithipunal


கட்டுமான பணிக்கு முக்கிய மூலப்பொருளாக செங்கல் உள்ளது. இந்த செங்கல் வெயில் காலத்தில் தான் தயார் செய்ய முடியும். ஆனால்,  பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருவதால், செங்கல் உற்பத்தி குறைந்துள்ளது.

தொடர் மழை காரணமாக செங்கல் விலை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர், திட்டுவிளை பகுதியில் மழையால் செங்கல் சூளைகளில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தட்டுபாடு காரணமாக 3,000 செங்கற்கள் கொண்ட ஒரு லோடின் விலை 15,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு செங்கல் விலை ரூ.5.20-லிருந்து ரூ. 6.40 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த விலை உயர்வால், தமிழகத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது ஒப்பந்ததாரர்களுக்கு சவாலாக மாறி உள்ளது. அதுமட்டுமல்லாமல், கட்டுமானப் பணியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sengal price increase in tamilnadu


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->