புதுக்கோட்டையில் பரபரப்பு!...சவர்மா சாப்பிட்ட 5 பேருக்கு தீவிர சிகிக்சை! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம், கீழ நான்காம் வீதியில் யூசுப் என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வரும் கடை கடையில், தட்சிணா மூர்த்தி நகரை சேர்ந்த அப்துல் என்பவர் அவரது வீட்டிற்கு சவர்மா வாங்கி சென்ற நிலையில், இதனை ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர்   சாப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்போது உணவு  ஒவ்வாமை பாதிப்பு காரணமாக அவர்களுக்கு  வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது கண்டறியப்பட்ட நிலையியில், தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவகத்தில்  சோதனை மேற்கொண்டனர். பின்னர் சோதனை முடிவில், அங்கிருந்த 7 கிலோ கெட்டுப்போன சிக்கன்களை பறிமுதல் செய்ததோடு, தொடர்ந்து அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டையில் உள்ள பிற சவர்மா கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில்,  அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sensation in pudukottai 5 people who ate shawarma received serious treatment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->