செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்றால் முதலில் இதை பண்ணுங்க! - அண்ணாமலை கருத்து! - Seithipunal
Seithipunal


திருப்பூர், பல்லடம் பகுதியைச் சேர்ந்த பா. ஜனதா கிளை நிர்வாகி மோகன்ராஜ் (வயது 49) இவரது தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகிய 4 பேரும் கடந்த மாதம் 3 ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொடூர கொலை சம்பவம் வீட்டின் அருகே அமர்ந்து மது குடித்ததை தட்டிக் கேட்டதால் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பல்லடத்தில் என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்ட போது படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

பின்னர் கொலை செய்யப்பட்ட பா. ஜனதா நிர்வாகி மோகன்ராஜ் மகன் பிரணவ் (வயது 13) கல்வி செலவு முழுவதையும் பா.ஜ.க ஏற்றுக்கொள்ளும் எனவும் வாக்குறுதி அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்திருப்பதாவது, 'தமிழ்நாட்டில் மதுவால் வரும் சமூக விரோத செயல்களுக்கு இந்த 4 பேர் கொலை சம்பவமே சாட்சியாக உள்ளது. 

மது அருந்தி மிருகமானவர்களால் இந்த நான்கு குடும்பங்களின் நிம்மதி பறிபோனது. காவல்துறை, சமூக விரோதிகளையும் குற்றப் பின்னணியில் உள்ளவர்களையும் கண்காணிக்க தவறிவிட்டது. 

தமிழகத்தில் மதுபானத்தை விற்பனை செய்து இளைஞர்களை கொலைகாரர்களாக மாற்றியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காதது அவர் அமைச்சராக நீட்டிப்பதால் தான்.

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் மட்டுமே ஜாமீன் கிடைக்கும். 

தேர்தல் கூட்டணி தொடர்பாக தேசிய தலைமை முடிவு செய்யும்' என்றார். இதனை தொடர்ந்து அண்ணாமலை பல்லடம் நகரில் நடைபயணம் மேற்கொண்டார். அவருக்கு பா.ஜ.கவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji bail Annamalai opinion


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->