நீதிபதி நிஷா பானு தீர்ப்பில் உறுதி.!! EDக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு.!! பரபரப்பான நீதிமன்றம்.!!
Senthil Balaji case closed in Madras High Court
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் 2:15 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வின் முன்பு விசாரணை தொடங்கியது.
நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை எப்போதிலிருந்து விசாரிக்கலாம் என இரு நபர் அமர்வு முடிவு செய்யும் என மூன்றாவது நீதிபதி உத்தரவு தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது நீதிபதி நிஷா பானு "நான் எதையும் கேட்கவில்லை. நான் எனது தீர்ப்பில் உறுதியுடன் நிற்கின்றேன். இப்போது இரு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நான் எதுவும் கூற விரும்பவில்லை" என தெரிவித்தார்
அப்போது குறுக்கிட்ட அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா "இந்தப் பிரச்சினையை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. காவலில் வைக்கப்படும் தேதியை முடிவு செய்ய மட்டுமே இந்த விவகாரம் மூன்றாவது நீதிபதியால் திருப்பி அனுப்பப்படுகிறது" என வாதிட்டார்.
அதற்கு நீதியரசர் நிஷா பானு "நான் தலைவிதியை தீர்மானிக்க முடியாது. அவரை விடுவிப்பதற்கான எனது தீர்ப்பில் நான் உறுதியாக நிற்கிறேன். உச்சநீதிமன்றம் ஏற்கனவே விசாரணைக்கு எடுப்பது தொடர்பான வழக்கு நான் நடைபெற்று வருவதால் அங்கு முடிவு முடிவு செய்து கொள்ளட்டும். இந்த வழக்கை முடித்து விடுவோம்" என நீதிபதி பரத சக்கரவர்த்தியிடம் கேட்டார்.
அதற்கு நீதியரசர் பாரத சக்கரவர்த்தி "உச்சநீதிமன்றம் ஏற்கனவே இந்த சிக்கலைப் பார்த்துக் கொண்டிருப்பதால், இந்த வழக்கை முடித்துவிடுவோம். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நாம் தினமும் டிவி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், அதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டியதில்லை என்பதாலும், இந்த வழக்கின் மீது உச்ச நீதிமன்ற முடிவுக்கு விடுவதால் வழக்கை முடித்து வைக்கப்படுகிறது" என அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
English Summary
Senthil Balaji case closed in Madras High Court