செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு தள்ளி வைப்பு - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட கடந்த விசாரணையின் போது, செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி சோதனையிட்டது. அதில் 'எச்பி ஹார்டு டிஸ்க், லேப்டாப், எஸ்.எஸ்.டி. மெமரி கார்டு, பென்டிரைவ் ஆகிய 5 சாதனங்களை கைப்பற்றியது.

இருப்பினும் பென் டிரைவில் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டும் கோப்பு செந்தில்பாலாஜி வீட்டில் நடத்திய சோதனையின்போது இல்லை என்று வாதிடப்பட்டது. இதையடுத்து நேற்று நடத்தப்பட்ட விசாரணையின் போது, நீதிபதிகள் 'ரூ.67.74 கோடி பண மோசடிபுகாருக்கான ஆதாரமாக கூறப்படும் கோப்பு கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் இல்லை என்பது செந்தில் பாலாஜியின் வாதமாக உள்ளதே, இந்த கோப்பு எப்படி அமலாக்கத் துறைக்கு கிடைத்தது?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வக்கீல், 'இந்த பென் டிரைவ் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான லஞ்ச வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவு கைப்பற்றியது. இதுதொடர்பான தகவலை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கேட்டு பெற்றது' என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதி, 'கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் அந்த கோப்பு இருந்ததா?' என கேட்டனர். உடனே அமலாக்கத்துறை வழக்கறிஞர் 'செந்தில் பாலாஜியின் வீ்ட்டில் அந்த பென் டிரைவ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்று பதில் அளித்தார்.

இதற்கு நீதிபதிகள், 'கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், அதில் பணமோசடி புகார் தொடர்புடைய கோப்பு இருந்ததையும் அமலாக்கத் துறை நிரூபிக்க வேண்டும்' என்று தெரிவித்து விசாரணையை இன்று பிற்பகல் 3 மணிக்கு தள்ளி வைத்தனர். ஆனால், இன்று அவரது வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை. இதன் காரணமாக வரும் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthil balaji case postpond


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->