செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி: இடியை இறக்கிய நீதிமன்றம் - இது 46-வது முறை!
SenthilBalaji Chennai Sessions ED Money Laundering Case
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு, வருகின்ற ஜூலை 16ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என்று, சென்னை முதன்மை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, விடுவிக்க கூடிய மனு மீதான உத்தரவை தள்ளிவைக்கும் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகின்ற ஜூலை 16ஆம் தேதி நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போதுவரை சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜி, ஓர் ஆண்டுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே செந்தில்பாலாஜியின் ஜாமின் மனுக்கள் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தில் இவரின் ஜாமின் மேல்முறையீட்டு மனு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த ஜாமின் மேல்முறையீட்டு மனு மூன்று முறை விசாரணைக்கு வந்து தள்ளிவைக்கப்பட்ட நிலையில், அண்மையில் நான்காவது முறையாகவும் உச்சநீதிமன்றத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
SenthilBalaji Chennai Sessions ED Money Laundering Case