அந்த ஆவணம் எங்கே? செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் அனல் பறந்த உச்சநீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


சட்டவிராத பண பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும்செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் அமலாக்க துறையின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து வருகின்றது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ். ஓஹா தலைமையிலான அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறைக்கு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அதன் விவரம் சுருக்கமாக:

அமலாக்கத்துறை : ஜாமினில் விடுவித்தால் ஆதாரங்களை செந்தில் பாலாஜி அழிக்க வல்லவர்.

நீதிபதிகள் : சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்டு டிஸ்க் அமலாக்கத் துறைக்கு எப்படி கிடைத்தது? 

அமலாக்கத்துறை : சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்டு டிஸ்க் ஏற்கெனவே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வசம் இருந்தது.

நீதிபதிகள் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் தனது பங்கு எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறது, அது குறித்து அமலாக்கத்துறையின் பதில் என்ன?

கைப்பற்றிய டிஜிட்டல் உபகரணங்களின் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் இடம்பெற்று இருந்தால், அதை இப்போதே தெரியப்படுத்துங்கள். இந்த கேள்விக்கு நீங்கள் இதுவரை நீங்கள் பதில் அளிக்கவே இல்லை. இந்த வழக்கு விசாரணை தொடங்கியது முதல் 15 நிமிடங்களாக இந்த கேள்விக்கு பதில் பெறுவதற்கு நாங்கள் முயற்சி செய்து கொண்டே இருக்கிறோம். ஆனால் நீங்கள் பதில் அளிக்காமல் இருந்து வருகிறீர்கள். அந்த ஆவணங்கள் எங்கே? அதற்கான பதிலை தான் நாங்கள் கேட்கிறோம் என்று நீதிபதிகள் கேட்டனர்.

இதனை அடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஒரு குறிப்பு ஒன்று நீதிபதிக்கும், செந்தில் பாலாஜி தரப்புக்கும் கொடுக்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட செந்தில் பாலாஜி தரப்பு, அமலாக்கத்துறை குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக குற்றம் சாட்டினர். இதனை அடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SenthilBalaji SupremeCourt Enforcement Directorate case


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->