நடிகை கஸ்தூரி மீது தொடர்ச்சியாக வழக்குகள்: ஜாமீன் மனு மீது இன்று விசாரணை! - Seithipunal
Seithipunal


தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை கஸ்தூரி, இதனால் எழுந்த வழக்குகளில் கைதாகி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

நவம்பர் 3ஆம் தேதி சென்னையில், இந்து மக்கள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, பேசும் போதுதெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, எழும்பூர் போலீசார் கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  

தலைமறைவாக இருந்த கஸ்தூரி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த நிலையில், போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். பின்னர், சென்னை அழைத்து வந்து விசாரணை செய்தது தொடர்ந்து, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  

சிறையில் நடிகை கஸ்தூரி தூக்கமின்றி தவிக்கின்றதாகவும், சாப்பிட முடியாமல் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

கஸ்தூரி மீது மதுரை, கோவை, கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் மொத்தம் ஆறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கோயம்பேடு மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார்கள் உள்ளன.  

  கஸ்தூரியின் சார்பில் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனிமையில் வாழ்வதால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், சிறையில் அடைத்தால் தனது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இந்த மனு மீது நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. கஸ்தூரி மீதான வழக்குகள் மற்றும் அதற்கான விசாரணை தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Series of cases against actress Kasthuri Hearing on bail plea today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->