குமரியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை - கூண்டோடு பிடித்த போலீசார்.!!
seven peoples arrested for lottary seat sale in kumari
குமரியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை - கூண்டோடு பிடித்த போலீசார்.!!
தமிழகத்தில் லாட்டரி விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை நடைபெறுவதால் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் ரகசியமாக லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை பல பகுதிகளில் ரகசியமாக லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் நகைக்கடைகள் அதிகம் நிறைந்த பகுதியான மீனாட்சிபுரம் பகுதியில் ரகசியமாக லாட்டரி விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் படி, போலீஸார், மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு கட்டிடத்தின் மாடியில் ரகசிய அறைகளில் இளம் பெண்களை வைத்து கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிய வந்தது.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கு இருந்தவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில், 56 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கட்டுக்கட்டாக லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனுடன் ஆறு பெண்கள் மற்றும் ஒரு வாலிபரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த இளம்பெண்கள், தங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் எனவும், தினமும் 100 ரூபாய் பேட்டா எனவும் தெரிவித்தனர். இவர்கள் பெண்கள் என்பதால் போலீஸார் வழக்குப்பதிவு மட்டும் செய்து கொண்டு விடுவித்தனர். இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
seven peoples arrested for lottary seat sale in kumari