பாலியல் பேரபுகார்: பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
sex complaint nirmala devi case Adjournment
அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக நிர்மலா தேவி வேலை பார்த்து வந்தார். இவர் மீது கல்லுரியில் பயின்று வரும் மாணவிகளை பாலியல் தொழில் ஈடுபடுத்த நேரிலும், தொலைபேசியிலும், பேரம் பேசியதாக புகார் வர தொடங்கியது. அதற்கு ஆதாரமாக பல ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் கசிந்தன.
பல்வேறு புகார்களின் அடிப்படையில், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பு சாமியும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது இந்த பாலியல் வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியாரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். ஆனால் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நிர்மலா தேவி ஆஜராகாததால் தீர்ப்பானது வரும் 29ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
English Summary
sex complaint nirmala devi case Adjournment