கொடைக்கானலில் அதிர்ச்சி சம்பவம் : 300 அடி நீளத்திற்கு நிலத்தில் விரிசல்!.....காரணம் வனத்துறை அலட்சியமா?
Shocking incident in Kodaikanal 300 feet long cracks in the ground Is the reason forest department negligence
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்த மரங்களையும், பசுமை போர்வை போர்த்திய மலைப்பகுதிகளையும் கொண்ட கொடைக்கானலுக்கு இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த சூழலில், கொடைக்கானல் அருகே தொலுக்கம்பட்டியில் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு செருப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் அப்பகுதிக்கு வழக்கம் போல் வந்து கொண்டிருந்த நீர், கடந்த சில நாட்களாக வரவில்லை. இதன் காரணமாக, அப்பகுதி கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது நிலம் பிளவுற்று இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த விரிசல் மேல்மலை கிளாவரை தொலுக்கம்பட்டி கிராமத்திற்கு செல்லும் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் வனத்துறையின் அலட்சியத்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக, சமூக வலைத்தளங்களில் சிலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வெளுத்து வாங்கி வருகின்றனர்.
English Summary
Shocking incident in Kodaikanal 300 feet long cracks in the ground Is the reason forest department negligence