ஜாஃபர் சாதிக் வழக்கு: குற்ற பத்திரிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்.!! பதறும் முக்கிய புள்ளிகள்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் பிடிபட்ட 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் உட்பட 5 பேரை தேசிய போதை பொருள் தடுப்பு முகமை அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில்  அடித்துள்ளனர். 

இந்த வழக்கின் அடிப்படையில் ஜாபர் சாதிக் உடன் நெருக்கமாக இருந்த அனைவருக்கும் தேசிய போதை பொருள் தடுப்பு முகமை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியதை அடுத்து தற்போது நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த குற்ற பத்திரிக்கையில் வங்கி கணக்குகள், தடயவயல் துறை ஆவணங்கள் என மொத்தம் 97 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கில் 42 பேர் சாட்சியங்களாக தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் டெல்லியில் 50 கிலோ போதை பொருள் கடத்திய 3 பேர் கைதான போது ஜாபர் சாதிக் தனது 2 ஐபோன்களை நேப்பியர் பாலத்திற்கு அருகில் சென்று உடைத்து தூக்கி வீசியதாகவும், போதை பொருள் கடத்தல் மூலம் வரக்கூடிய பணத்தை ஜாபர் சாதிக் பீச் ஸ்டேஷனில் உள்ள பணம் மாற்றும் நிறுவனம் மூலமாக பணத்தை மாற்றி இருப்பதாகவும் தகவல். 

அதேபோன்று கடந்த 2014 ஆம் ஆண்டு முகமது முஸ்தபா என்பவர் மூலமாக ஜாபர் சாதித்துடன் பழக்கம் ஏற்பட்டதாக இயக்குனர் அமீர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இறைவன் பெரியவன் என்ற படத்தை ஜாபர் சாதிக் தயாரித்ததாகவும் இவருடன் இணைந்து ஒரு ப்ரொமோஷன் நிறுவனம் ஆரம்பித்துள்ளதாகவும் இயக்குனர் அமீர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையே திடீர் திருப்பமாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தியிருப்பதாக ஒப்புக்கொண்டதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 

இந்த நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களுடன் ஜாபர் சாதி பேசியதாக சந்தேகத்தின் பெயரில் குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டு தடவிகள் சோதனைக்கு அனுப்பிய போது ஜாபர் சாதிக் 3 நபர்களுடன் பேசியதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக குற்ற பத்திரிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த வழக்கில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shocking information in Jaffar Sadiq drug case charge sheet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->