3 முறை தொடர்ந்து டெண்டர்! சீண்ட கூட ஆளில்லை.. கோவையில் அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் 141 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்ட தொடர்ந்து மூன்று முறை டெண்டர் விட்டும் இதுவரை யாரும் எடுக்க முன்வரவில்லை இதனால் மேம்பால பணிகள் தாமதம் ஆகி வருகிறது 

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து தொழில் நகரமான  விளங்கிவருவது கோயம்புத்தூர். நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதால்,  போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. 

இங்கு ஏராளமான தொழிற்சாலைகள், பின்னல் ஆடைகள் நிறுவனம், பம்பு செட்டு,  கனரக வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலைகள் மற்றும் கிரைண்டர், மிக்ஸி  தயாரிக்கும்  ஆலைகள்,  ஐடி நிறுவனங்கள் என பல்வேறு தொழில் நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றது.

 

கோவையும் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும்  திருப்பூரும் அருகருகே உள்ளதால் கடந்த 10 ஆண்டுகளில் அசுரத்தனமாக  இந்த நகரங்கள் வளர்ந்துள்ளன. இதனால்  வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. 

கோவையில், திருப்பூர்  - சிங்கநல்லூர் சந்திப்பு மிக முக்கியமானதாகும் நான்கு முக்கிய சாலைகளும் இங்குதான் சந்திக்கின்றன.  இதனால் இந்த பகுதியில் புதிய மேம்பாலம் கட்ட கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  திட்டமிடப்பட்டது.   அனால் மெட்ரோ ரயில் இந்த பகுதியில் வரும் என்பதால்  பணியில் சுணக்கம் ஏற்பட்டது.  இபோது வேறு வழியில் மெட்ரோ பணிகள் தொடங்கவுள்ளதால், சிங்காநல்லூரில் மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை மீண்டும் முடிவு செய்தது 

ஆனால்,  141 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்ட தொடர்ந்து மூன்று முறை டெண்டர் விட்டும் இதுவரை யாரும் எடுக்க முன்வராதது அதிர்ச்சியை எப்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shok in coimbatore.. no one pick tender


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->