சேலம்: மது பாட்டில்களை பேரம் பேசிய எஸ்.ஐ பணியிடை நீக்கம்!
SI suspended for bargaining over liquor bottles SP orders
சேலம் தலைவாசல் அருகே அரசு மது பாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்கும் வியாபாரியுடன் எஸ்.ஐ பேரம் பேசியுள்ளார். இதனை அறிந்த சேலம் எஸ்.பி பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
சேலம் தலைவாசல் அருகே உள்ள இலுப்பநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அரசு மதுபான பாட்டில்களை கள்ளச் சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்துள்ளார்.
இதில் வீரகனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் எஸ்.ஐ யிடம் போனில் பேசிய ஆடியோ வைரல் ஆகியுள்ளது. அதில், 30 பாட்டில்கள் மட்டும் ஓடுவதால் வியாபாரம் கட்டுபடியாகவில்லை எனக் கூறி,1500 ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்து பேசும் எஸ்.ஐ, வழக்கு சம்பந்தமான கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளுக்கு 2500 ரூபாய் பணம் கேட்பதாக கூறுகிறார். இந்த உரையாடலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீரகனூர் காவல் நிலைய எஸ்.ஐ சேலம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், எஸ்.ஐ பேசிய ஆடியோ உறுதியானது. இதையடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி அவர்கள், எஸ்.ஐ பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
English Summary
SI suspended for bargaining over liquor bottles SP orders