மருதமலை கோவிலில் வெள்ளி வேல் திருட்டு - மர்ம ஆசாமி கை வரிசை..!!
silvar vel steal in maruthamalai murugan temple
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலையில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஏழாவது படை வீடான பிரசித்தி பெற்ற சுப்பிரமணி சுவாமி கோவிலில் நாளைய தினம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருதமலை அடிவாரத்தில் உள்ள வேல் கோட்டம் தியான மண்டபத்தில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த மண்டபத்தில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி உயரமுள்ள வெள்ளியால் செய்யப்பட்ட, சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான வேல் இருந்தது. இந்த வேலினை நேற்று சாமியார் வேடத்தில் வந்த திருடன் எடுத்துச் செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி பட்டப் பகலில் மருதமலை தியான மண்டபத்தில் இருந்த வெள்ளி வேலை மர்ம ஆசாமி திருடிச் சென்ற சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
silvar vel steal in maruthamalai murugan temple