இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்… காயமடைந்த 2 மீனவர்கள்.! நடந்தது என்ன?
sir lanka navy attack Rameswaram fishermen
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 100க்கும் மேற்பட்ட விசை படகுகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர்.
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.
மேலும் கத்தி, இரும்பு கம்பி போன்ற பொருட்களால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களது வலைகளை அறுத்து சேத படுத்தியதாக தெரிகிறது.
இதனால் இலங்கை கடற்படைக்கு பயந்து மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர். இந்த தாக்குதலில் இரண்டு மீனவர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த மீனவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதல் குறித்து மீன் துறை அதிகாரிகளும், மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
sir lanka navy attack Rameswaram fishermen