சீர்காழியில் 3½ வயது குழந்தை வன்கொடுமை! கல்லால் அடித்து கண் பாதிப்பு!
Sirkazhi Child Harassed And Brutal Attacked
சீர்காழி அருகே மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரமாக தாக்கிய, 16 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மூன்றரை வயது சிறுமி வழக்கம்போல் அருகே உள்ள அங்கன்வாடிக்கு சென்றுள்ளார்.
பிறகு மதியம் வீடு திரும்பிய குழந்தையை, அவர் உறவினரான 16 வயதுடைய சிறுவன், அச்சிறுமிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து, அருகே உள்ள ஒரு புதருக்குள் சிறுமையை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை அறிந்த அச்சிறுமி சத்தமிட ஆரம்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் அங்கிருந்த கல்லை எடுத்து சிறுமியின் தலை மற்றும் முகத்தில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் அச்சிறுமியின் கண்கள் சிதைந்துள்ளது.
இதனையடுத்து அச்சிறுமியின் பெற்றோர்கள், வெகு நேரம் ஆகியும் குழந்தை காணவில்லை என தேட தொடங்கியுள்ளனர். அப்பொழுது அச்சிறுமி அங்கன்வாடிக்கு பின்புறம் உள்ள ஒரு புதரில், ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அக்குழந்தையை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குற்ற செயலில் ஈடுபட்ட சிறுவனை கைது செய்த மகளிர் போலீசார், சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இச்சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Sirkazhi Child Harassed And Brutal Attacked