சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் ஏற்ற தேசிய கொடியை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.! - Seithipunal
Seithipunal


சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் கொடியேற்ற தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. 

இந்த நிலையில் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்கொடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு பேசியதாவது, இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 வருடங்கள் ஆனதை முன்னிட்டு அதனை 75 ஆவது சுதந்திர திருநாள் திருவிழாவாக அரசால் கொண்டாடப்படுகிறது. 

தமிழக முழுவதும் அனைத்து வீடுகளிலும் வருகின்ற 13, 14 மற்றும் 15ஆம் தேதி தேசிய கொடியினை ஏற்றி வைத்து அனைவரின் பங்களிப்பையும் அளித்திடும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. அதன் அடிப்படையில் இங்கு தேசியக்கொடி வழங்கப்பட்டு வருகின்றது. இக்கொடியை மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் இணைந்து வீடுகளில் ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivagangai District Collector presented the national flag


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->