கோயம்புத்தூரில் அதிர்ச்சி - சினிமா பானியில் யானை தந்தம் கடத்திய 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு யானை தந்தம் கடத்தப்படுவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில் இரண்டு வனத்துறை குழுக்கள் யானை தந்தம் கடத்தி வரும் வாகனங்களை கண்காணித்து வந்தனர்.

அப்போது, துடியலூர் பகுதியில் நின்றிருந்த குழுவினர் சந்தேகப்படும்படியாக வந்த பொலீரோ ஜீப்பை மடக்க முயன்றனர். அப்போது அந்த ஜீப்பில் வந்தவர்கள் வனத்துறையினர் வந்த காரை இடித்து விட்டு பன்னிமடை வழியாக தப்பித்துச் செல்ல முயன்றனர். 

இந்த வாகனத்தை வனத்துறையினர் பின்தொடர்ந்து சென்று பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பிதர்காடு பழங்குடியினர் சங்கத்தின் செயலாளராக உள்ள சங்கீதா தலைமையில் நீலகிரியில் இருந்து யானை தந்தத்தை கடத்தி வந்ததும், இதனை கோவையில் உள்ள ஒருவருக்கு விற்க முடிவு செய்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் யானை தந்தம் கடத்தி வந்த ஆறு பேரைக் கைது செய்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சமத்துவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six peoples arrested for kidnape elephant ivory in coimbatore


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->