தலைக்கேறிய மதுபோதை... தந்தையை கொன்ற மகன்..! - Seithipunal
Seithipunal


மது போதையில் தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அவ்வை நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு திருமணமாகி விஜய லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில நாட்களாக அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்துள்ளார். இதனால், அவரது மனைவி சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் மதியம் மது போதையில் வீட்டிற்கு வந்த சங்கர் தனது தாய் ராணியுடன் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்ததால்  அங்கிருந்த கட்டையால் தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சங்கரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son Kills His Father in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->