மது அருந்த பணம் தர மறுத்த மாற்றுதிறனாளி தாய்.. மகன் வெறிச்செயல்.. கன்னியாகுமரி அருகே நிகழ்ந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


மது அருந்த பணம் தராததால் தாயை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் செப்பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சரோஜினி (74). மாற்றுத்திறனாளியான இவருக்கு விஜயன் என்ற மகன்‌ இருக்கிறார். விஜயனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது தினமும் மது அருந்திவிட்டு தாயை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மது அருந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து கடனாக வாங்கி வைத்திருந்த பணத்தை கேட்டு சரோஜியிடம்  சண்டையிட்டு உள்ளார். சரோஜினி தர மறுக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த மரக்கட்டை ஒன்றை எடுத்து தாயை அடித்து கொன்றுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது அருந்த பணம் தராத தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son kills His Mother Near Kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->