மது பாட்டிலால் தாயைக் குத்திய போதை மகன்.! வியாசர்பாடியில் பரபரப்பு.!
Son stabs mother with liquor bottle in Chennai vyasarpadi
சென்னையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் தாயைக் குத்திய போதை மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் காவல் துறையினர் நேற்று சாஸ்திரி நகரில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அப்பகுதியை சேர்ந்தவர்கள் ரோந்து போலீசாருக்கு ஒரு வீட்டின் மாடியில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவர் பாட்டிலால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த வீட்டில் இருந்த வாலிபரை பிடித்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் அஜய்(22) என்பதும், பாட்டிலால் குத்தப்பட்ட பெண் அஜயின் தாய் ருக்மணி (43) என்பது தெரியவந்தது. மேலும் குடிபோதையில் இருந்த அஜய் தாயுடன் ஏற்பட்ட தகராறு மது பாட்டிலால் ருக்மணியை சரமாரியாக குத்தியது விசாரணையில் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அஜய்யை கைது செய்து, மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
English Summary
Son stabs mother with liquor bottle in Chennai vyasarpadi