பண மோசடி வழக்கு! காங்கிரஸ் எம்எல்ஏ கைது! பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை! - Seithipunal
Seithipunal


பண மோசடி வழக்கில் அரியானா மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோன்பத் தொகுதி எம்எல்ஏ சுரேந்தர் பன்வார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பணம் மோசடி வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சோன்பத்தில் உள்ள சுரேந்தர் மற்றும் அவருக்கு தொடர்புடைய வீட்டில் அமலாக்கத்துடன் சோதனை நடத்தியது. இந்த நிலையில் தற்போது அவர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சுரேந்தர் மகனையும் போலீசார் கஸ்டடியில் எடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2005 முதல் 2014 வரை சிங் சூடா ஹரியானா நகரம் மேம்பாட்டு மையத்தின் முன்னாள் தலைவர் லோக்சந்த் குப்தா ஆகியோர் உள்ளிட்ட 16க்கும் மேற்பட்டோர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் இணைந்து நகர்புறங்களில் காலணி அமைப்பதற்காக சட்டவிரோதமாக நிலங்களை அப்புறப்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

நேற்று முன் தினம் மகேந்திர காங்கிரஸ் எம்எல்ஏ ராவுதன் சிங் தொடர்புடைய ரூ1400 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. இந்த நிலையில்  இந்த வழக்கு தொடர்புடைய அரியானா சட்டமன்ற தேர்தலில் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் அமலகத்துறையினரால் அடுத்தடுத்து கைது செய்யப்படும் சம்பவம் அரியானாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonipat constituency MLA Surender Panwar of Aryana State Congress arrested in money laundering case


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->