அமோனியா வாயு கசிவு... தாமாக முன்வந்து விசாரணை.!! - Seithipunal
Seithipunal


சென்னை எண்ணூர் அருகே உள்ள பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட அம்மோனியா திரவ வாயு கசிவு காரணமாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு வாந்தி மயக்கம் கண்ணெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிப்பை ஏற்பட்டதால் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மக்கள் நல்வாழ்வு துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதற்கிடையே கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறுது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ள நிலையில் அதனை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கோரமண்டல் உர தொழிற்சாலையில் இன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. அமோனியா ரசாயனம் காற்றில் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதால் கோரமண்டல் தொழிற்சாலையில் அனைத்து பணிகளையும் நிறுத்த உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில் எண்ணூர் அம்மோனியா வாயு கசிவு தொடர்பாக தாமாக முன்வந்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.  தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் நீதித்துறைக்கு  தற்போது விடுமுறை காலம் என்பதால் அது முடிந்த பிறகு வரும் ஜனவரி 2ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sothern National Green Tribunal initiates investigation on ennore ammonia gas leak


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->