எந்த சாராயமும் வேண்டாம்! " மது கடைகளை மூடி பெண்கள் தாலிய காப்பாத்துங்க " - சௌமியா அன்புமணி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பூரண மது விளக்கை அமல்படுத்தி தாய்மார்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி 20,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு  கிராமம் கிராமமாக சென்று நன்றி தெரிவித்து வருகிறார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி உள்ள கிராமங்களில் தொண்டர்களோடு வன்னியர் சங்கம் மற்றும் பாமக கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.

பின்னர் தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த பசுமைத்தாயகம் தலைவரும்  தர்மபுரி பாமக வேட்பாளருமான சௌமியா அன்புமணி ராமதாஸ்  பேசுகையில், மாம்பழ சின்னத்தில் எனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றேன்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகார குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சௌமியா அன்புமணி, கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கலாச்சாராயம் சம்பவம் 5  நாட்களுக்கு முன்னாடியே நடந்துள்ளது. கலாச்சாராயம் குடித்து 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழத்தை பற்றி பேசுகிறார்கள். அரசு டாஸ்மார்க் கடைகளில் விற்கப்படும் சாராயத்தை குறித்து எத்தனை உயிர்கள் பலியாகி உள்ளது.

அதிக விதவைகள் உள்ள மாவட்டம் இந்த தர்மபுரி மாவட்டம். கள்ளச்சாராயம் வேண்டாம் . நல்லசாராயமும் வேண்டாம். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தி தாய்மார்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்றும் சௌமியா அன்புமணி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Soumya Anbumani press meet in Dharmapuri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->