ரெயிலில் புதிய வசதி.. செல்லப்பிராணிகளையும் தங்களுடன் அழைத்து செல்ல வேண்டுமா?.. - Seithipunal
Seithipunal


பொதுமக்களுக்கு ரெயில்வே துறையில் உள்ள வசதிகள், ரெயில்கள் இயக்கம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக விளக்கும் வகையில் 'உங்கள் ரெயில்வே பற்றி தெரிந்து கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் தெற்கு ரெயில்வே பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில்,  நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள், விலங்குகள் மற்றும் பறவைகளை ரெயிலில் பயணிகள் எடுத்து செல்வதற்காக உள்ள வசதிகள் குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- 

ரெயிலில், யானை, குதிரை, கழுதை, செம்மறி ஆடு, நாய் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகளை ரெயில்களில் ஏற்றிச் செல்லலாம். அதற்கான விவரங்களை ரெயில் நிலையங்களில் பெறலாம். பயணிகள் ரெயில்களில் வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் நாய், பூனை ஆகியவற்றையும் தங்களுடன் அழைத்துச்செல்ல விரும்புகிறார்கள். 

இதையடுத்து, பயணிகள் தங்களின் செல்லப் பிராணியான நாய்களை முதல் ஏசி வகுப்பிலும், ரெயில் மேலாளரின் மேற்பார்வையின் கீழ் லக்கேஜ் மற்றும் பிரேக் வேனில் எடுத்துச் செல்லவும் பதிவு செய்யலாம். பயணிகள் தாங்கள் பயணிக்கும் பெட்டியில் நாயை அழைத்துச் செல்ல வேண்டும் என்றால், ஏசி முதல் வகுப்பு மற்றும் கூபே தங்குமிடத்தை முன்பதிவு செய்ய வேண்டும். அதிலும் பயணியின் ஒரு டிக்கெட்டில் ஒரு நாய் மட்டுமே அனுமதிக்கப்பட்டு அதற்காக கட்டணமும் வசூலிக்கப்படும். 

இதைத்தொடர்ந்து, ரெயில் புறப்படுவதற்கு மூன்று மணிநேரத்துக்கு முன்பே நாயை லக்கேஜ் அல்லது பார்சல் அலுவலகத்திற்கு அழைத்து வர வேண்டும். உரிய பெட்டியில் மட்டுமே நாய்க்கு அனுமதி, பொது பயணிகள் பெட்டிகளில் நாயை கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை. முறையாக முன்பதிவு செய்யாமல் நாய்களை ஏற்றிச்சென்றால் ஆறு மடங்கு லக்கேஜ் கட்டணம் விதிக்கப்படும். 

அதன் பின்னர் செல்ல பிராணிகளுக்கு எந்தவிதமான தொற்று நோய்களாலும் பாதிக்கப்படவில்லை என்று கால்நடை மருத்துவரிடம் பயணத்திற்கு 24 மணி முதல் 48 மணி நேரத்திற்கு முன்பே சான்றிதழ் பெற வேண்டும்.

குறிப்பாக முன்பதிவு செய்யும் போது நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய அட்டைகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், நாய்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான முழு பொறுப்பும் பயணிகளுடையது. அதுமட்டுமல்லாமல், நாய்க்கு தண்ணீர் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை உரிமையாளர்தான் செய்ய வேண்டும். 

இதையடுத்து, பயணிகள் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் நாய்களை கூடைகளில் எடுத்து செல்லலாம். ஆனால், அதற்காக பயணிகள், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் மற்றும் சரியான அடையாள சான்றுகளை வைத்திருக்க வேண்டும்.

பின்னர், நாயை ஏற்றி பெட்டிக்குள் அடைக்கும் முன்பு அதன் உரிமையாளர் நாயை வாய் காப்புடன் சரியாக சங்கிலியால் பிணைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றுத் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south railway department new alouncement for pasenger


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->