தமிழகத்திற்கு "ரெட் அலெர்ட்" விடுத்த இனித்த வானிலை ஆய்வு மையம்!
South Tamilnadu Very Heavy Rain Alert Red Alert IMD
தென் தமிழகத்தில் அதி கனமழைக்க வாய்ப்புள்ளதாக (ரெட் அலர்ட்) இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே வருகின்ற 23ஆம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், அது தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், தென் தமிழகத்திற்கு தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
English Summary
South Tamilnadu Very Heavy Rain Alert Red Alert IMD