16 வகை பலனை பெற்றுத் தரும் சிவலிங்கம் - எந்த கோவிலில் உள்ளது தெரியுமா?
south then parappi sornapureeswarar temple
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென் பொன் பரப்பி என்னும் ஊரில் சொர்ணபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நந்தி சிலை மற்ற கோயில்களில் உள்ள நந்தி சிலையை போல் இல்லாமல் பால நந்தியாக அமைக்கப்பட்டிருப்பதால் இடையூறு இல்லாமல் பிரதோஷ நேரங்களில் நேரடியாக நாம் சிவ தரிசனம் செய்யலாம்.
இந்தக்கோயிலில் வெளிப்பிரகாரத்தில் ஆறுமுகம் வடிவத்தில் 8 அடி உயரத்திற்கு முருகன் சிலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறை வாசலில் துவார பாலகர்களுக்கு பதிலாக இரண்டு லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆவணி மாதம் பௌர்ணமி மற்றும் பங்குனி உத்திரம் நாள் அன்று காலை 6 மணி முதல் 7.30 வரை பாலநந்தியின் இரு கொம்புகளுக்கும் இடையே சூரிய ஒளி புகுந்து இரு கோடுகளாக பிரிந்து கர்ப்பகிரகத்தில் இருக்கும் சிவலிங்கத்தில் மேல் விழுவதைக் காணலாம். இந்தக் கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் கருவறையானது மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று காகபுஜண்டர் தனது நாடிச் சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
மேலும், ராகு காலத்தில் தேன், பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர், விபூதி, சந்தனம், கரும்புச்சாறு ,எலுமிச்சம் பழச்சாறு, பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், நெய், அரிசி மாவு, நல்லெண்ணெய், புண்ணிய நீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேக பொருட்கள் கொண்டு வழிபாடு செய்யப்படுகிறது. அப்போது லிங்கத்தின் உச்சியில் ஆரம்பித்து 16 கோடுகள் வழியாக அடிபாகம் வரை பீடத்தில் அபிஷேகம் நடைபெறுவதை நாம் காணலாம்.
English Summary
south then parappi sornapureeswarar temple