குட் நியூஸ்..! இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் SETC பேருந்துகள்!
southern districts SETC buses tomorrow
செங்கல்பட்டு, கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் 'கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம்' அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் மழை நீர் வடிகால் அமைப்பது, பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்ல வசதிகள் அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.
English Summary
southern districts SETC buses tomorrow