சென்னை மக்களே.."மிஸ் பண்ணிடாதீங்க".. குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெரும் வகையில் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களிலும் இன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. 

இந்த சிறப்பு முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், நகல் குடும்ப அட்டை கோருதல் போன்ற சேவைகள் இந்த சிறப்பு முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசின் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவையில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அவ்வாறு பொதுமக்கள் அளிக்கும் புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special camp for correction of ration card in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->