அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - திருச்செந்தூரில் சிறப்பு தரிசனம் ரத்து.!
special dharisanam cancelled in thiruchenthur
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினந்தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. அதிலும் விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.
இதன் காரணமாக திருச்செந்தூர் வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை அதிகப்படுத்த பல்வறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவிலிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம், முதியோர்களுக்கான தரிசனம் வழக்கம்போல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வரும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையும் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோவில் நிர்வாகம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
special dharisanam cancelled in thiruchenthur