தேய்பிறை அஷ்டமி - தமிழகம் முழுவதும் கால பைரவருக்கு சிறப்பு பூஜை.!!
special poojai for kala bairavar temple for theipirai astami
ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் அஷ்டமி கால பைரவரை வழிபடுவதற்கு உகந்த நாள். இந்த நாளில் கால பைரவரை வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது அழிக்க முடியாத நம்பிக்கை. இந்த தினத்தில் பைரவர் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
இந்த நிலையில், சித்திரை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.
* நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
* பல்லடம் அருகே, மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் மற்றும் மலையம்பாளையத்தில் வடுகநாத சாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலபைரவருக்கு சந்தனம், பால், தயிர், தேன், உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து கால பைரவரை தரிசித்தனர்.
* கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
* நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்தச் சிறப்பு வழிபாட்டில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
English Summary
special poojai for kala bairavar temple for theipirai astami