தமிழகத்திற்கு அகதிகளாக வந்த13 பேரை.. மீண்டும் மீட்டுச் சென்றது இலங்கை கடற்படை.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன.

அதன் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் விலை உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று தனுஷ்கோடி அருகேயுள்ள மணல் திட்டுப் பகுதியில் 13 பேரை படகில் வந்தவா்கள் இறக்கிவிட்டுச் சென்றதாக மீனவா்கள், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து இந்திய கடலோரக் காவல் படையினா் அகதிகளை மீட்க ஹோவா்கிராப்ட் கப்பலில் அங்கு சென்றனா். அப்போது அவா்கள் இலங்கை கடற்பகுதியான 6 ஆம் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து இந்திய கடலோரக் காவல் படையினா் 5 ஆம் மணல் திட்டிலேயே காத்திருந்தனா். இந்நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினா் 13 பேரையும் மீட்டு, படகில் மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் சென்றனா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lankan Navy rescued 13 refugees who came to Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->